மேற்கு வங்க மாநிலத்தில் மத்திய அமைச்சரை சிறை பிடித்த மாணவர்கள் - போலீஸ் பாதுகாப்புடன் அமைச்சரை மீட்டு சென்ற ஆளுநர்

மேற்கு வங்க மாநிலத்தில் பல்கலைக்கழக மாணவர்களால் சிறைபிடிக்கப்பட்ட மத்திய அமைச்சர் பபுல் சுப்ரியாவை அம்மாநில ஆளுநர் போலீஸ் பாதுகாப்புடன் மீட்டு அழைத்து சென்றார்.
மேற்கு வங்க மாநிலத்தில் மத்திய அமைச்சரை சிறை பிடித்த மாணவர்கள் - போலீஸ் பாதுகாப்புடன் அமைச்சரை மீட்டு சென்ற ஆளுநர்
x
கொல்கத்தாவில் உள்ள  ஜாதவ்பூர் பல்கலக்கழகத்தில் அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் சார்பில் கருத்தரங்க  நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்க சென்ற  மத்திய அமைச்சர் பபுல் சுப்ரியாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மாணவர்கள்  சங்கம் மற்றும் இடதுசாரி மாணவர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அமைச்சரை உள்ளே நுழைய விடாமல் நுழைவாயிலில் தடுத்து நிறுத்தி மாணவர்கள்  வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. துணை வேந்தர் சமாதானபடுத்தியும் பலனளிக்காததால், அம்மாநில ஆளுநர் போலீஸ் பாதுகாப்புடன் அமைச்சரை  மீட்டு அழைத்து சென்றார். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தம்மை தாக்கியதாக அமைச்சர் பபுல் சுப்ரியா புகார் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தை கண்டித்து  பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்