"பண்டிகை காலத்தையொட்டி வங்கி கடனுதவி" - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

பண்டிகை காலத்தையொட்டி நாடு முழுவதும் 400 மாவட்டங்களில் வங்கி கடனுதவி வழங்குவதற்கான சிறப்ப் கூட்டங்கள் நடத்தப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
பண்டிகை காலத்தையொட்டி வங்கி கடனுதவி - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்
x
பொதுத்துறை வங்கிகளின் செயல்பாடுகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற அந்த கூட்டத்தில் அனைத்து பொதுத்துறை 
வங்கிகளின் தலைவர்கள் மற்றும் உயர் அதிகாரிகள்  கலந்து கொண்டனர். அப்போது பேசிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், வங்கிகள் , வாடிக்கையாளர்கள் மற்றும் சிறு குறு நிறுவனங்களுக்கு  கடனுதவிகளை அளிப்பதை  மேலும் அதிகரிக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார். 

வங்கிகள் அல்லாத நிதிநிறுவனங்களுடன் இணைந்து செயல்படவும், வாடிக்கையாளர்களுக்கு கடனுதவி அளிக்கவும் நாடு முழுவதும் 400  மாவட்டங்களில் வங்கி கடனுதவி வழங்குவதற்கான சிறப்பு கூட்டங்கள் நடத்தப்படும் என்று  நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். நிதி நெருக்கடியில் உள்ள சிறு, குறு நிறுவனங்கள் செலுத்த வேண்டிய கடன் தொகையை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை வாராக்கடனில் சேர்க்க வேண்டாம் என்று நிர்மலா சீதாராமன் கேட்டு கொண்டார்.

Next Story

மேலும் செய்திகள்