கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறைப்பு

கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பருவமழை குறைந்ததால் கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளுக்குநீர் வரத்து குறைந்துள்ளது.
கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறைப்பு
x
கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பருவமழை குறைந்ததால் கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளுக்குநீர் வரத்து குறைந்துள்ளது. இரு அணைகளிலும் முழு கொள்ளளவில் நீர் உள்ள நிலையில்,  அணைகளுக்கு வரக்கூடிய உபரி நீர் 11 ஆயிரத்து 599 கனஅடி அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவிற்கு, நீர்வரத்து நேற்று 16,000 கனஅடியாக இருந்த நிலையில் இன்று காலை 8 மணி நிலவரப்படி 15,000 கனஅடியாக குறைந்துள்ளது.  ஒகேனக்கல்லுக்கு வரும் நீரின் வரத்தும் படிப்படியாக குறைந்து வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 43-வது நாளாக அருவியில் குளிக்கவும், 15-வது நாளாக பரிசல் இயக்கவும் தடையை மாவட்ட நிர்வாகம் நீட்டித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்