இந்தியாவில் இ-சிகரெட்டுகளுக்கு தடை - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

இந்தியாவில் இ-சிகரெட்டுகளின் தயாரிப்பு, விற்பனை, ஏற்றுமதி, இறக்குமதி, விளம்பரம் செய்வது என அனைத்து நடவடிக்கைகளையும் தடை செய்வதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இ-சிகரெட்டுகளுக்கு தடை - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
x
இந்தியாவில் இ-சிகரெட்டுகளின் தயாரிப்பு, விற்பனை, ஏற்றுமதி, இறக்குமதி, விளம்பரம் செய்வது என  அனைத்து நடவடிக்கைகளையும் தடை செய்வதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  சுமார் 400-க்கும் மேற்பட்ட  நிறுவனங்களின் இ-சிகரெட்டுகள் விற்கப்படுவதாகவும் , இதனால் பள்ளி மாணவர்கள் கூட பாதிக்கப்படுவதால், அவற்றை தடை செய்ய மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறினார்.  தடையை மீறுபவர்களுக்கு 1 லட்ச ரூபாய் அபராதமும், ஓர் ஆண்டு சிறைத்தண்டனையும் விதிக்கப்படும் என்றும், தடையை தொடர்ந்து மீறுபவர்களுக்கு 5 லட்ச ரூபாய் அபராதமும், 3 ஆண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்படும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்