பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று 69-வது பிறந்த நாள் : பட்டாம் பூச்சிகளை பறக்கவிட்டு பிரதமர் மகிழ்ச்சி
தமது பிறந்த நாளையொட்டி சொந்த மாநிலமான குஜராத் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று தமது 69 பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு சோனியாகாந்தி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். குஜராத் சென்ற பிரதமர் நரேந்திர மோடி தமது தமது தாயார் ஹீராபென் மோடியை சந்தித்து ஆசி பெற்றார். பின்னர் விமானம் மூலம் பிரதமர் மோடி நர்மதா மாவட்டத்தில் உள்ள சர்தார் சரோவர் அணையை பார்வையிட சென்றார். முன்னதாக கல்வானி சுற்று சூழல் பாதுகாப்பு பூங்காவை, பிரதமர் பார்வையிட்டார். அங்குள்ள தொங்கு பாலத்தில் நின்று இயற்கை அழகை பிரதமர் கண்டு ரசித்தார்.
பின்னர் பூங்காவில் பட்டாம் பூச்சிகளை பறக்கவிட்டு பிரதமர் மோடி மகிழ்ந்தார். கேவாதியா பகுதியில் உள்ள உயிரியல் பூங்காவிற்கு சென்ற பிரதமர் மோடி ஜீப்பில் சென்று சிங்கம் உள்ளிட்ட வனவிலங்குகளை கண்டு ரசித்தார். பின்னர் நர்மதா ஆற்றின் குறுக்கே உள்ள சர்தார் சரோவர் அணைக்கு சென்று பார்வையிட்ட பிரதமர் மோடி சிறப்பு வழிபாடும் நடத்தினார். சர்தார் சரோவர் அணை அருகே கட்டப்பட்டுள்ள 'Statue of Unity' என்ற பிரமாண்ட சர்தார் வல்லபாய் படேல் உ ருவ சிலையை பார்வையிட்ட பிரதமர் மோடி, அதனை வீடியோ எடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார். பின்னர் எக்தா கைவினை பொருள் கூடத்திற்கு சென்ற பிரதமர் மோடி பாக்கு உள்ளிட்ட இயற்கை பொருட்களால் தயாரிக்கப்படும் பொருட்கள் குறித்து கேட்டறிந்தார்.
Next Story