பயணிகளின் உடைமைகளை மறந்து பறந்த தனியார் விமானம்

டிவிட்டரில் விமான நிறுவனத்தை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்
பயணிகளின் உடைமைகளை மறந்து பறந்த தனியார் விமானம்
x
டெல்லியில் இருந்து கடந்த 15ஆம் தேதி அன்று புறப்பட்ட இண்டிகோ விமானம் இஸ்தான்புல் நகருக்கு பயணமானது. 130க்கும் மேற்பட்ட பயணிகளுடன் புறப்பட்ட அந்த விமானம், ஒட்டுமொத்த பயணிகளின் உடைமைகளை எடுத்து செல்வதற்கு மறந்து புறப்பட்டு சென்றுவிட்டது. இதையடுத்து இஸ்தான்புல் நகருக்கு சென்ற பின்னர் அதுகுறித்து விமானிகளுக்கு தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து  பயணிகளுக்கு அது குறித்து தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதைக்கேட்டு கொதித்து எழுந்த பயணிகள் ஆத்திரத்தின் உச்சிக்கு சென்றனர். பலரும் தங்கள் மருந்து உள்ளிட்ட முக்கிய பொருட்கள் இல்லாமல் அவதிக்குள்ளாகினர். இதனால் ஷேம் ஆன் இண்டிகோ என்ற ஹேஷ்டேக் மூலம் டிவிட்டரில் இண்டிகோ விமான நிறுவனத்தை நெட்டிசன்கள் பலர் வறுத்தெடுத்தனர். இந்த மெகா மறதி சர்ச்சையால் இண்டிகோ நிறுவனம் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்