வடிவமைப்பு சிக்கலில் ஆப்பிள் ஐபோன் 11 - ட்ரைஃபோபியா ஒவ்வாமை ஏற்படுவதாக எதிர்ப்பு
பதிவு : செப்டம்பர் 12, 2019, 03:31 PM
ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள ஐபோன் 11 வரிசை போன்கள் டெக்னாலஜி பிரியர்களை ஈர்த்தாலும் இந்த புதிய ஐபோன் வடிவமைப்பு புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.
சிலருக்கு சில காட்சிகள், வடிவங்களை கண்டால் உடனடியாக ஒவ்வாமை ஏற்படும் என்கிறது மனநல மருத்துவம். அப்படியான ஒரு வகை ஒவ்வாமைதான் ட்ரைஃபோபியா என்கிற பிரச்சினை.

திரளாக இருக்கும் வட்டவடிவிலான ஓட்டைகள் போன்ற அமைப்பை கொண்டுள்ளவற்றை பார்த்தால் ஏற்படும் ஒரு வித பதட்டம், பய உணர்ச்சியைதான் ட்ரைஃபோபியா  ஒவ்வாமை என்கிறார்கள்.

குறிப்பாக தோலில் ஏற்படும் தொற்று நோய்களின் வடிவமாக இருப்பதால், இந்த அச்சம் ஏற்படலாம் என மனநல மருத்துவர்கள் சொல்லும் நிலையில், இந்த அலர்ஜி வடிவத்துக்குள் புதிய ஐபோன்கள் சிக்கிக் கொண்டதாக சமூக வலைதளங்களில் கருத்துகள் பரவி வருகின்றன.

புதிய ஐபோன் 11,  ஐபோன் 11 ப்ரோ மற்றும் ஐபோன் 11 ப்ரோ மேக்ஸில் உள்ள பல்வேறு சிறப்பம்சங்களையும் தாண்டி, இந்த புதிய வகை வடிவமைப்பிற்கு  ட்ரைஃபோபியா  ஒவ்வாமை உள்ளவர்களும் எதிர்ப்புக் குரல்களை எழுப்பியுள்ளனர்.

புதிய ஐபோன்களில் இரண்டு மற்றும் மூன்று கேமராக்கள்  கூட்டாக இருப்பது போல் வடிவமைக்கப்பட்டுள்ளதால், இந்த  ஒவ்வாமையை கிளறி உள்ளதாக அவர்களின் குற்றச்சாட்டாக உள்ளது.

இந்த போபியா உள்ளவர்களில் பலருக்கு அது தங்களுக்கு இருப்பதே கூடத் தெரியாது என்பதால், அந்த மனநிலை கொண்டவர்கள் ஐபோன் 11 வரிசையை வாங்குவதற்கு தயக்கம் காட்டலாம் என்கிற சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

 ட்ரைஃபோபியா எச்சரிக்கை குறியீட்டினை ஐபோன் 11 வரிசை போன் அட்டை பெட்டிகளில் இடம்பெற வேண்டும் என்று சமூக வலைதளங்களில் கோரிக்கை எழுந்துள்ள நிலையில், புதிய சர்ச்சையை ஆப்பிள் நிறுவனத்துக்கு பெரும் சவாலாக இருக்கும் என்றால் மிகையில்லை.


தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

3591 views

ஆயிரம் மாணவிகள் ஆலமரம் வடிவில் அமர்ந்து சாதனை

உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தையொட்டி செங்குன்றம் அரசினர் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், ஆலமரம் வடிவில் அமர்ந்து உலக சாதனை படைத்தனர்.

486 views

திராவிட இயக்கம் வளர்த்த தமிழ் நூல் வெளியீட்டு விழா

பேராசிரியர் மு.பி. பாலசுப்ரமணியன் எழுதிய திராவிட இயக்கம் வளர்த்த தமிழ் நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

104 views

பிற செய்திகள்

பாகிஸ்தான் வான் எல்லையில் மோடி விமானத்துக்கு தடை

பாகிஸ்தான் வான் எல்லையில், பிரதமர் மோடி விமானம் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

20 views

உலக அளவில் அதிக மதிப்புமிக்க 100 பிராண்டுகள் - செல்வாக்கு மிக்க பிராண்டாக இடம் பிடித்த ரிலையன்ஸ் ஜியோ

உலக அளவில் அதிக மதிப்பு மிக்க 100 பிராண்டுகளில் இந்தியாவில் இருந்து 3 நிறுவனங்கள் இடம் பிடித்துள்ளன.

868 views

உச்ச நீதிமன்றத்துக்கு 4 புதிய நீதிபதிகள் நியமனம்

தமிழகத்தை சேர்ந்த ராமசுப்ரமணியன் நியமனம்

20 views

பாகிஸ்தான் வான் எல்லையில் மோடி விமானத்துக்கு தடை

இந்தியாவின் கோரிக்கையை மீண்டும் நிராகரித்தது பாகிஸ்தான்

227 views

இந்தி திணிப்பு - கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் கருத்து

இந்தி திணிப்பு - கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் கருத்து

313 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.