வீட்டுக்காவலில் தெலுங்கு தேச கட்சி தலைவர்கள் : சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதம் - பதற்றம்

ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளார்.
வீட்டுக்காவலில் தெலுங்கு தேச கட்சி தலைவர்கள் : சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதம் - பதற்றம்
x
ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளார்.

ஆந்திராவின் குண்டூர் மாவட்டம் பால்நாடு உள்ளிட்ட கிராமங்களில் தெலுங்கு தேச கட்சி உறுப்பினர்கள் ஒய்எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியினரால் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தெலுங்கு தேசம் கட்சி சார்பில் இன்று போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். பால்நாடு, நரசரபேட்டா, குஜாராலா உள்ளிட்ட இடங்களில் 144 தடையுத்தரவு போடப்பட்டு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, தெலுங்கு தேசம் கட்சி தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு அக்கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு தனது வீட்டில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். அவரது இல்லத்திற்கு செல்ல முயன்ற தெலுங்கு தேசம் உறுப்பினர்களை போலீசார தடுத்து நிறுத்தியதால் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து அவர்களை போலீசார்  கைது செய்தனர்.  

Next Story

மேலும் செய்திகள்