நாடு முழுவதும் அமலுக்கு வந்த புதிய மோட்டார் வாகன சட்டம் - ஒடிசாவில் பெட்ரோல், டீசல் விற்பனை சரிவு

நாடு முழுவதும் கடந்த ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள புதிய மோட்டார் வாகன சட்டத்தால் ஒடிசா மாநிலத்தில் பெட்ரோல் டீசல் தேவை 17 லட்சம் லிட்டர் அளவுக்கு நாளொன்றுக்கு குறைந்துள்ளது.
நாடு முழுவதும் அமலுக்கு வந்த புதிய மோட்டார் வாகன சட்டம் - ஒடிசாவில் பெட்ரோல், டீசல் விற்பனை சரிவு
x
நாடு முழுவதும் கடந்த ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள புதிய மோட்டார் வாகன சட்டத்தால், ஒடிசா மாநிலத்தில் பெட்ரோல், டீசல் தேவை 17 லட்சம் லிட்டர் அளவுக்கு நாளொன்றுக்கு குறைந்துள்ளது. இதனால் அம்மாநில மற்றும் மத்திய அரசுக்கு நான்கு கோடி ரூபாய் அளவு நாளொன்றுக்கு வரி வருவாய் இழப்பு ஏற்பட்டு வருவதாக, அம்மாநில பெட்ரோல், டீசல் விற்பனையாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. சிறிய ரக வாகனங்களுக்கான தண்டத் தொகையை குறைக்க வேண்டும் என ஆட்டோ ஓட்டுநர்கள் கோரியுள்ளனர். மேலும் புகை கண்காணிப்பு மையங்கள் அதிக அளவில் திறக்க வேண்டும் என்றும், இந்த சான்று இல்லாவிட்டால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே புதிய மோட்டார் வாகன சட்டப்படி தண்டத் தொகையை மத்தியப்பிரதேச அரசு தள்ளிவைத்துள்ள  நிலையில், குஜராத் அரசு ஆலோசித்து முடிவெடுக்க உள்ளதாக அறிவித்துள்ளது. தமிழகத்தில் பழைய தண்டத் தொகையை வசூலிக்கப்பட்டு வருகிறது. உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில், புதிய மோட்டார் வாகன சட்டப்படி போலீசார் நடந்து கொண்ட விதத்தால் மென்பொறியாளர் ஒருவர் உயிரிந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விரிவான சாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சாலைவிபத்துக்களால் ஏற்படும் மரணங்களை தடுக்க என்று கூறப்படும் நிலையில், புதிய மோட்டார் வாகன சட்டம் வாகன ஓட்டிகளுக்கு சிக்கலை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்