இழந்த தகவல் தொடர்பை பெற 14 நாட்களுக்குள் முயற்சிப்போம் - இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்

அடுத்த 14 நாட்களுக்குள் சந்திரயான் 2 திட்டத்தில் இழந்த தகவல் தொடர்பை பெற முயற்சிப்போம் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
இழந்த தகவல் தொடர்பை பெற 14 நாட்களுக்குள் முயற்சிப்போம் - இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்
x
அடுத்த 14 நாட்களுக்குள், சந்திரயான் 2 திட்டத்தில் இழந்த தகவல் தொடர்பை பெற முயற்சிப்போம் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். விக்ரம் லேண்டரில் தற்போது தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், ஆர்பிட்டரில் கூடுதல் எரிவாயு இருப்பதால் அதன் ஆயுட்காலம் ஏழரை ஆண்டுகள் வரை நீடிக்க வாய்ப்பு உள்ளதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார். மொத்தத்தில் சந்திரயான் 2 திட்டம், 100 சதவிகிதம் வெற்றியை நெருங்​கி விட்டதாகவும் இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்