இந்தியா முழுவதும் ஒரே ரேசன் அட்டை திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு முடிவு

இந்தியா முழுவதும் ஒரே ரேசன் அட்டை அளிக்கும் திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்தியா முழுவதும் ஒரே ரேசன் அட்டை  திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு முடிவு
x
இந்தியா முழுவதும் ஒரே ரேசன் அட்டை  அளிக்கும் திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தற்போது ஒவ்வொரு மாநிலமும், பொது மக்களுக்கு  ரேசன் கடைகள் மூலம்  மானிய விலையில் அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட  பொருட்களை வழங்கி வருகின்றன. வடமாநிலங்களில் கோதுமையும் , தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில்  அரிசியும் முதன்மையாக பொது வினியோகத் திட்டம் மூலம் வழங்கப்படுகின்றன. அவற்றை ஒருங்கிணைத்து "ஒரே தேசம் - ஒரே ரேசன் அட்டை'' திட்டத்தை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதில் ஆந்திரா, குஜராத், அரியானா, ஜார்க்கண்ட், கர்நாடகா, கேரளா, மராட்டியம், ராஜஸ்தான், தெலுங்கானா, திரிபுரா ஆகிய 10 மாநிலங்கள் இணைந்துள்ளன.

Next Story

மேலும் செய்திகள்