நிலவின் பரப்பிலிருந்து லேண்டர் கருவி சுற்றும் உயரம் குறைப்பு

நிலவை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட சந்திரயான் -2 விண்கலத்தில் உள்ள விக்ரம் லேண்டர் நேற்று ஆர்பிட்டரில் இருந்து பிரிந்த நிலையில், 43 நாட்களுக்கு பின்னர் இன்று அதில் உள்ள கருவிகள் இயக்கி பார்க்கப்பட்டது.
x
நிலவை ஆய்வு செய்ய ஜூலை 22ஆம் தேதி சந்திரயான் 2 செயற்கைக் கோள் ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. ஆகஸ்ட் 14 ஆம் தேதி புவியின் சுற்றுவட்டப் பாதையில் இருந்து, நிலவின் சுற்று வட்டப்பாதையை நோக்கி பயணிக்க தொடங்கிய சந்திராயன் -2, நேற்று நிலவுக்கு சுமார் 119 கிலோ மீட்டரில் இருந்து 127 கிலோ மீட்டருக்குள் இருந்த போது ஆர்பிட்டரில் இருந்து தனியாக பிரிக்கப்பட்டது. விக்ரம் லேண்டர் இன்று முதல் தனியாக நிலவை நோக்கிய பயணத்தை தொடங்கியுள்ளது. இந்நிலையில் விக்ரம் லேண்டரில் உள்ள 5 த்ராட்டில் த்ரஸ்டர் என்ஜின்கள் 43  நாட்களுக்கு பிறகு முதன் முறையாக இன்று காலை 8.45 மணியில் இருந்து 9.40 மணிக்குள் மூன்றரை வினாடிகள் அதில் உள்ள இயந்திரங்களை இயக்கி, நிலவின் தரை பரப்பிலிருந்து 120 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்த லேண்டர் விக்ரமின் உயரத்தை 109 கிலோ மீட்டர் உயரமாக குறைக்கப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.  இதேபோல நாளை அதிகாலை மேலும் 36 கிலோ மீட்டர் அளவுக்கு உயரத்தை குறைக்கும்  இரண்டாவது நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. இறுதி மற்றும் திட்டத்தின் வெற்றியை நிர்ணயிக்கும் செப்டம்பர் 7 ஆம் தேதியன்று விக்ரம் லேண்டர்  நிலவில் தரை இறங்குகிறது. தற்போது வரை சந்திரயான் 2-ல் உள்ள அனைத்து பாகங்களும் சிறப்பாக செயல்பட்டு வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. லேண்டர் விக்ரம் நிலவில் தரையிறங்கும் நிகழ்வை கண்காணிப்பு மையத்திலிருந்து நேரடியாக பார்ப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி வரும் 7-ஆம் தேதி இஸ்ரோ வர உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்