நடுக்கடலில் தத்தளித்த கப்பல் ஊழியர்கள் - 13 பேரை மீட்ட இந்திய கடலோர காவல்படை

கர்நாடகா மாநிலம் மங்களூரு புது துறைமுகம் அருகே நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த சரக்கு கப்பல் ஊழியர்கள் 13 பேரை இந்திய கடலோர காவல்படையினர் பத்திரமாக மீட்டனர்
x
கர்நாடகா மாநிலம் மங்களூரு புது துறைமுகம் அருகே நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த சரக்கு கப்பல் ஊழியர்கள் 13 பேரை இந்திய கடலோர காவல்படையினர் பத்திரமாக மீட்டனர். கடல் கொந்தளிப்பு காரணமாக, திரிதேவி சரக்கு கப்பலுக்குள் கடல்நீர் புகுந்தது. உடனடியாக கடலோர காவல்படைக்கு அவசர உதவி அழைப்பு விடுத்த ஊழியர்கள், மிதவை படகுகள் மூலம் கப்பலில் இருந்து வெளியேறினர். அங்கு விரைந்த கடலோர காவல்படை 13 ஊழியர்களை பத்திரமாக மீட்டனர். மேலும், 7 பேரை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்