அமலுக்கு வந்தது புதிய மோட்டார் வாகன சட்டம்

போக்குவரத்து விதிகளை மீறினால் பல மடங்கு அபராதம் விதிக்கும் வகையிலான திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் நாடு முழுவதும் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
அமலுக்கு வந்தது புதிய மோட்டார் வாகன சட்டம்
x
போக்குவரத்து விதிகளை மீறினால் பல மடங்கு அபராதம் விதிக்கும் வகையிலான திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் நாடு முழுவதும் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த புதிய சட்டத்தின்படி, மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாயும், அதிவேகமாக வாகனத்தை இயக்குவது மற்றும் உரிய ஆவணங்கள் இன்றி வாகனம் ஓட்டுபவர்களுக்கு 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் மற்றும் ஓராண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும். சீட்பெல்ட், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கான அபராதம், நூறு ரூபாயிலிருந்து ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டினால் அபராதம் செலுத்துவதுடன் 3 மாதங்களுக்கு ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும். செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டினால் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இந்த விதிமுறைகள் இன்று முதல் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட வேண்டும். ஆனால் அபராதம் வசூலிக்கும் கருவியில் இந்த கட்டணம் மாற்றம் செய்யப்படாததால், இன்று சென்னையில் பழைய கட்டணமே வசூலிப்பதாக போக்குவரத்து போலீசார் கூறினர்.இருப்பினும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களிடம், நீதிமன்றம் மூலம் புதிய அபராத கட்டணம் வசூலிக்கப்படுவதாக போக்குவரத்து போலீசார் கூறினர்.

Next Story

மேலும் செய்திகள்