பெண்ணிடம் பர்ஸை திருடிய கில்லாடி பெண் கைது : பெண்ணின் அஜாக்கிரதையால் நடந்த சம்பவம்
பதிவு : ஆகஸ்ட் 31, 2019, 02:33 PM
ஏடிஎம் கார்டில் பின் நம்ரை எழுதி வைத்ததால், 24 ஆயிரம் ரூபாயை பெண் ஒருவர் பறிகொடுத்த சம்பவம் புதுச்சேரியில் நடந்துள்ளது.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் இருந்து பேருந்தில் வந்த மீரா என்ற பெண்ணை நோட்டமிட்டு வந்த  பெண் ஒருவர் அவரது பர்ஸை நூதனமான முறையில் திருடிச் சென்றார். பின்னர் அந்த பர்ஸில் இருந்த 4 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்ட அந்த பெண், ஏடிஎம் கார்டில் பின் நம்பர் எழுதியிருப்பதை பார்த்துள்ளார். இதைப் பார்த்ததும் அந்த பெண் அந்த ஏடிஎம் கார்டை எடுத்துக் கொண்டு தட்டாஞ்சாவடியில் உள்ள ஏடிஎம் மையத்திற்கு சென்று 24 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துள்ளார். பணம் எடுக்கப்பட்ட தகவல் மீராவுக்கு குறுந்தகவல் மூலம் வந்ததால் அதிர்ச்சியடைந்த அவர், காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து வங்கி ஏடிஎம்மில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகள் மூலம் பணத்தை திருடிய தேன்மொழி என்ற பெண்ணை கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ளது விசாரணையில் தெரிய வந்தது. ஏடிஎம் கார்டில் பின் நம்பரை குறிப்பிடக் கூடாது என வங்கிகள் அறிவுறுத்தியும், சிலர் இது போல் செய்வதால் பணத்தை பறிகொடுக்கும் சூழல் உருவாகிறது.

தொடர்புடைய செய்திகள்

கண்களை மறைத்தபடி அசத்தும் 5ஆம் வகுப்பு மாணவன்...

புதுச்சேரியில் கண்ணைக் கட்டிக்கொண்டு பணத்தாள்களை கூறியும், எண்களை இணைத்து படம் வரைந்தும் 5 வயது சிறுவன் அசத்தி வருகிறார்.

66 views

பழனி அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியிடம் 10 சவரன் நகை திருட்டு

பழனி அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியிடம் 10 சவரன் நகையை பறித்துச் சென்ற மர்ம நபர்களைப்போலீசார் தேடி வருகின்றனர்.

56 views

சங்ககிரி அருகே திருட்டில் ஈடுபட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வருக்கு சிறை

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே நூதன திருட்டில் ஈடுபட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரை சங்ககிரி போலீசார் கைது செய்துள்ளனர்.

18 views

புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 2வது நாள் கூட்டம்: அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டோருக்கு இரங்கல்

புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது நாளான இன்றும் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.

11 views

பிற செய்திகள்

"என்னையும் முதலமைச்சரையும் பிரிக்க முடியாது" - பன்னீர் செல்வம்

தன்னையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும் பிரிக்க முடியாது என துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

35 views

கட்டணம் செலுத்தாத மாணவர்களை வெளியே அனுப்பிய கல்லூரி : மாணவர்கள் சாலை மறியல்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் கட்டணம் செலுத்தவில்லை என மாணவர்களை வெளியே அனுப்பியதால், 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

644 views

பஞ்சாப் அசோசியேஷன் தாக்கல் செய்த வழக்கு : மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

கட்டாய கல்வி உரிமை சட்டப்பிரிவில் உள்ள குறிப்பிட்ட சட்டப்பிரிவை ரத்து செய்ய உத்தரவிட கோரி பஞ்சாப் அசோசியேஷன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

30 views

தோஷம் கழிப்பதாக கூறி மூதாட்டியிடம் நூதன திருட்டு

தோஷம் கழிப்பதாக கூறி மூதாட்டி முகத்தில் மயக்க மருந்தை தெளித்து செயினை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

34 views

கன்னியாகுமரி : அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர்களை இடமாற்ற எதிர்ப்பு

கன்னியாகுமரி மாவட்டம் கூட்டுமங்கலம் அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர்களை இடமாற்ற எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

67 views

செய்யாற்றில் வெள்ளப் பெருக்கு...

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்துள்ள செய்யாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

193 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.