கண்களை மறைத்தபடி அசத்தும் 5ஆம் வகுப்பு மாணவன்...

புதுச்சேரியில் கண்ணைக் கட்டிக்கொண்டு பணத்தாள்களை கூறியும், எண்களை இணைத்து படம் வரைந்தும் 5 வயது சிறுவன் அசத்தி வருகிறார்.
கண்களை மறைத்தபடி அசத்தும் 5ஆம் வகுப்பு மாணவன்...
x
புதுச்சேரியில் கண்ணைக் கட்டிக்கொண்டு பணத்தாள்களை கூறியும், எண்களை இணைத்து படம் வரைந்தும் 5 வயது சிறுவன் அசத்தி வருகிறார். புதுச்சேரி தனியார் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், எண்கள் எழுதப்பட்ட புள்ளிகளை இணைத்து படங்களை வரைந்து அசத்திய மாணவன் சாய் பிரணவின் செயல் பலரையும் புருவம் உயர்த்த வைத்தது. ரூபாய் தாள்களின் வண்ணம், மதிப்பு, எண்கள் ஆகியவற்றை அச்சு பிசகாமல் கூறிய மாணவன் சாய் பிரணவின் அசாத்திய திறமை, மாணவர்கள் உள்ளிட்ட அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. புக் ஆப் ரெக்கார்ட்ஸ், அசிஸ்ட் வேர்ல்ட் ரெக்காட் பவுண்டேசன் அமைப்புகள் இந்த சாதனையை பார்வையிட்டன.

Next Story

மேலும் செய்திகள்