காஷ்மீர் தொடர்பான வழக்குகள் - அக்டோபரில் விசாரணை

ஜம்மு, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவை ரத்து செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தும் அக்டோபரில் விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
காஷ்மீர் தொடர்பான வழக்குகள் - அக்டோபரில் விசாரணை
x
ஜம்மு, காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட 14 பொதுநலன் வழக்குகளை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது. வரும் அக்டோபர் மாதம் இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்தப்படும் என்றும், அதுதொடர்பாக பதிலளிக்க மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டுள்ளது. மேலும், மத்தியஸ்தம் செய்வது தொடர்பாக மத்திய அரசு விடுத்த கோரிக்கையையும் ஏற்க தலைமை நீதிபதி அமர்வு மறுத்துவிட்டது. மேலும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை தளர்த்தக் கோரி தொடரப்பட்ட மற்றொரு வழக்கில்,  7 நாள்களுக்குள் பதில் அளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும், உடல்நலத்தால் பாதிக்கப்பட்ட தமது நண்பரான தாரிகேமியை சந்திக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரிக்கு அனுமதி அளித்துள்ள தலைமை நீதிபதி அமர்வு, நண்பரை சந்தித்து விட்டு வந்த பின்னர் அவரது உடல்நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர். மேலும், அனந்தநாக்கில் உள்ள தனது பெற்றோரை சந்திக்க முகமது ஆலீம் சையத்துக்கு அனுமதி அளித்த நீதிபதிகள், பெற்றோர் உடல் நிலை குறித்து பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டதுடன், ஆலிமுக்கு உரிய பாதுகாப்பு செய்து தரவும் அம்மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்