முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி மரணம்...

முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 66.
x
கடந்த ஆண்டு சிறுநீரக அறுவை சிகிச்சை செய்து கொண்ட அருண்ஜெட்லி வீட்டில் ஒய்வில் இருந்து வந்தார். இந்நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்டதை தொடர்ந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் 9-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்தார். அருண்ஜெட்லியின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, அமித்ஷா, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அருண் ஜெட்லி மறைவுக்கு முதலமைச்சர் பழனிசாமி இரங்கல்



அருண்ஜெட்லி மறைவு - ஹெச்.ராஜா இரங்கல்



அருண்ஜெட்லி மறைவு - தமிழிசை  இரங்கல்



அருண்ஜெட்லி மறைவு - இல.கணேசன் இரங்கல்



அருண்ஜெட்லி மறைவு : அமைச்சர் ஜெயக்குமார் இரங்கல்



அருண்ஜெட்லி மறைவு : டி.ஆர்.பாலு (திமுக எம்.பி) இரங்கல்


Next Story

மேலும் செய்திகள்