கர்நாடக அமைச்சரவையில் 17 அமைச்சர்கள் பதவி ஏற்பு : ஆளுநர் வஜுபாய் வாலா பதவி பிரமாணம் செய்துவைத்தார்

கர்நாடகாவில் முதல்வர் எடியூரப்பா தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கர்நாடக அமைச்சரவையில் 17 அமைச்சர்கள் பதவி ஏற்பு : ஆளுநர் வஜுபாய் வாலா பதவி பிரமாணம் செய்துவைத்தார்
x
கர்நாடகாவில் முதல்வர் எடியூரப்பா தலைமையிலான அமைச்சரவை  விரிவாக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர்,  2 முன்னாள் துணை முதல்வர்கள் கே.எஸ் ஈஸ்வரப்பா, அசோகா மற்றும் 2 சுயேட்சை எம் எல் ஏக்கள்  உள்பட 17 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். புதிதாக பதவி ஏற்றவர்களுக்கு கர்நாடக ஆளுநர் வஜுபாய் வாலா பதவி பிரமாணம் செய்துவைத்தார். கடந்த 20 நாட்களாக முதல்வர் மட்டுமே பொறுப்பில் இருந்த நிலையில், அமைச்சரவை விரிவாக்கம் தொடரும் என்று முதல்வர் எடியூரப்பா கூறியுள்ளார். கர்நாடக அமைச்சரவைக்கு அதிகபட்சமாக 34 பேர்  பதவி ஏற்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்