கர்நாடகா அணைகளில் இருந்து நீர் திறப்பு குறைப்பு

கர்நாடக அணைகளில் இருந்து இன்று காலை 9 மணி நிலவரப்படி 13,500 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கர்நாடகா அணைகளில் இருந்து நீர் திறப்பு குறைப்பு
x
கர்நாடக அணைகளில் இருந்து  இன்று காலை 9 மணி நிலவரப்படி 13,500 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து 8 ஆயிரத்து 500 கன அடியாக உள்ள  நிலையில்,  நீர் வெளியேற்றம் 8 ஆயிரத்து 500 கன அடியாக உள்ளது. முழுக் கொள்ளளவை எட்டியுள்ள நிலையில் அணைக்கு வரும் நீர் அப்படியே திறந்து விடப்படுகிறது. மறுபுறம் கடல் மட்டத்திலிருந்து 2 ஆயிரத்து 284 அடி உயரம் கொண்ட கபினி அணையில்,  இன்று காலை நிலவரப்படி 2 ஆயிரத்து 283.81 அடி உயரத்திற்கு நீர் இருப்பு உள்ளது. அணைக்கு நீர்வரத்து 8 ஆயிரத்து 100 கன அடியாக உள்ள நிலையில்,  அணையில் இருந்து 5000 கன அடி நீர் திறந்துவிடப்பட்டு உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்