நிலவின் சுற்றுவட்டப் பாதையில் இன்று நுழைகிறது சந்திரயான் - 2

நிலவின் சுற்றுவட்டப் பாதையில் சற்று நேரத்தில் நுழைகிறது சந்திரயான்-2. அதற்கான பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
நிலவின் சுற்றுவட்டப் பாதையில் இன்று நுழைகிறது சந்திரயான் - 2
x
நிலவின் சுற்றுவட்டப் பாதையில் சற்று நேரத்தில் நுழைகிறது சந்திரயான்-2. அதற்கான பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 30 நாள் நீண்ட பயணத்திற்கு பின்னர் இன்னும் சற்று நேரத்தில் நிலவின் சுற்று வட்டப் பாதையில் நுழைகிறது சந்திராயன் 2 விண்கலம் . காலை 8.30 முதல் 9.30 மணிக்குள்  தரைக் கட்டுப்பாட்டு நிலையத்தில் இருந்து, சந்திரயான் 2  விண்கலத்தில் உள்ள என்ஜின் இயக்கப்படுகிறது.  இதனை தொடர்ந்து நிலவின் சுற்றுவட்டப் பாதைக்கு செல்லும் சந்திராயன் 2 விண்கலம், நிலவுக்கு அருகில்  118 கிலோ மீட்டர் தொலைவிலும் மற்றும் 18 ஆயிரத்து 78 கிலோ மீட்டர் தொலைவிலும் சுற்றி வரும். நாளை, நாளை மறுநாள் மற்றும் வரும் செப்டம்பர் முதல் தேதி, விண்கலத்தின் சுற்றுவட்டப் பாதை மாற்றி அமைக்கப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து நிலவுக்கு அருகில் 114 கிலோ மீட்டர்  தொலைவிலும், தொலைவில் 128 கிலோமீட்டர் தூரத்திலும் சந்திராயன் 2 சுற்றி வரும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து செப்டம்பர் 2-ல், அதிலிருந்து  விக்ரம் லேண்டர் தனியாக பிரிந்து நிலவை சுற்றி வரும். அதனைத் தொடர்ந்து அதன் சுற்றுவட்டப் பாதையின் தொலைவு குறைக்கப்பட்டு, திட்டமிட்டப்படி வரும் 7 ஆம் தேதி நிலவின் தென் துருவப் பகுதியில் தரையிறங்கும். இதனைத் தொடர்ந்து அதில் உள்ள பிரக்யான் என்ற சிறிய ரக வாகனம் நிலவின் தரையில் ஊர்ந்து சென்று ஆய்வு பணியை மேற்கொள்ளும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. இன்றைய பணி மிகவும் முக்கியமான சந்திராயன் 2 பயணத்தில் முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்