கர்நாடகா அமைச்சரவை இன்று விரிவாக்கம் : 13 முதல் 14 பேருக்கு அமைச்சர் பதவி வாய்ப்பு?

கர்நாடகா மாநில அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படுகிறது.
கர்நாடகா அமைச்சரவை இன்று விரிவாக்கம் : 13 முதல் 14 பேருக்கு அமைச்சர் பதவி வாய்ப்பு?
x
கர்நாடகாவில் 14 மாதங்களாக பதவி வகித்து வந்த குமாரசாமி அரசு ஜுலை 23-ஆம் தேதி கவிழ்ந்தது. இதனைத் தொடர்ந்து புதிய முதலமைச்சராக எடியூரப்பா  ஜூலை 26 -ஆம் தேதி பதவியேற்றார். அப்போது அமைச்சர்கள் யாரும் பதவியேற்கவில்லை. பின்னர் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், எடியூரப்பா வெற்றி பெற்றார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன் டெல்லி சென்ற எடியூரப்பா பாஜக தலைவர் அமித் ஷா சந்தித்து அமைச்சரவை விரிவாக்கம் குறித்து ஆலோசனை மேற்கொண்டதாக தெரிகிறது. இந்நிலையில், அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக ஆளுநருக்கு எடியூரப்பா கடிதம் எழுதியுள்ளார். அமைச்சரவையில் 13 முதல் 14 பேர் இடம் பெறலாம் என தெரிகிறது.


Next Story

மேலும் செய்திகள்