கணவர் முத்தலாக் கூறி விவாகரத்து செய்ததால் மனைவி தற்கொலை
உத்திர பிரதேசத்தில் கணவர் முத்தலாக் கூறியதால் ,மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்திர பிரதேச மாநிலம் , SHRAVASTI மாவட்டம் BHINGA பகுதியில் பெண் சடலம் ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது, இதனையடுத்து அங்கு வந்த போலீசார் பெண்ணின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், பின்னர் அந்த பெண் அடையாளம் காணப்பட்டு அவரது பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டது. விசாரணையில் கணவர் முத்தலாக் கூறியதால் அவர் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. தற்போது போலீசார் கணவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Next Story

