அருண் ஜெட்லி உடல்நிலை கவலைக்கிடம் - அவசர சிகிச்சை பிரிவில் தீவிர சிகிச்சை

முன்னாள் மத்திய நிதியமைச்சரும், பாஜ மூத்த தலைவருமான அருண் ஜெட்லியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அருண் ஜெட்லி உடல்நிலை கவலைக்கிடம் - அவசர சிகிச்சை பிரிவில் தீவிர சிகிச்சை
x
முன்னாள் மத்திய நிதியமைச்சரும், பாஜ மூத்த தலைவருமான அருண் ஜெட்லியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. மூச்சுத்திணறல் காரணமாக கடந்த 9ஆம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அருண் ஜெட்லி, இதய மற்றும் நரம்பியல் மையத்தின் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், நேற்று அருண் ஜெட்லியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. இதனைத் தொடர்ந்து அவருக்கு எக்மோ எனப்படும் உயிர்காக்கும் சுவாசக்கருவிகள் பொருத்தப்பட்டன. நுரையீரல், இருதம் உள்ளிட்ட பிரிவுகளின் சிறப்பு மருத்துவர்கள் அடங்கிய குழு அருண் ஜெட்லியின் உடல்நிலையை கண்காணித்து வரும் நிலையில்,  அவருக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்படுவதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது 

Next Story

மேலும் செய்திகள்