தீவிரவாதிகளுக்கு உதவுவதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும் - ராஜ்நாத் சிங்

ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்று பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.
தீவிரவாதிகளுக்கு உதவுவதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும் - ராஜ்நாத் சிங்
x
ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்று பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார். ஹரியானா மாநிலம், கல்காவில் நடைபெற்ற பேரணியை தொடங்கி வைத்து பேசுகையில்,  தீவிரவாதிகளுக்கு உதவுவதை நிறுத்தினால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்று குறிப்பிட்டார். காஷ்மீர் விவகாரத்தில் உலக நாடுகள் தலையிட வேண்டும் என்கிற, பாகிஸ்தானின் முயற்சி தோல்வியில் முடிந்தது என்று குறிப்பிட்ட ராஜ்நாத் சிங், பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றால் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து மட்டும் பேசலாம் என்றும் குறிப்பிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்