2 தினங்களில் ரூ.29 ஆயிரம் கோடி சம்பாதித்த முகேஷ் அம்பானி
பதிவு : ஆகஸ்ட் 16, 2019, 04:38 AM
இரண்டே தினங்களில் ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 29 ஆயிரம் கோடி ரூபாய் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.
கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் வருடாந்திர குழு கூட்டத்தில், மூன்று முக்கிய அறிவிப்புகளை ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் மற்றும் முதன்மை நிர்வாக இயக்குநர் முகேஷ் அம்பானி வெளியிட்டார். அடுத்த 18 மாதங்களுக்குள் ரிலையன்ஸ் நிறுவனத்தின் கடன் முற்றிலுமாக அடைக்கப்பட்டு, கடன் இல்லாத நிறுவனமாக மாற்றப்படும் என்று அறிவித்தார். இதன் முதல் படியாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஆயில் டூ கெமிக்கல் பிரிவில் 20 சதவிகித பங்குகளை சவுதி அராம்கோ நிறுவனத்திடம் விற்பதாக அறிவித்தார். மேலும் ஜியோ பைபர் நிறுவனம், அதிவேக இணைய சேவை வழங்கப்படும் என்று அறிவித்தார். இந்த மூன்று அறிவிப்புகளை அடுத்து, ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு, பெரும் உயர்வை கண்டது. கடந்த வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவின் போது,  ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை ஆயிரத்து 162 ஆக இருந்த நிலையில், புதன்கிழமை வர்த்தக நேர முடிவின் போது, ஆயிரத்து 288 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதன் மூலம், அம்பானியின் சொத்து மதிப்பு இரண்டே தினங்களில் 28 ஆயிரத்து 684 கோடி அதிகரித்துள்ளது. புளூம்பெர்க் கோடீஸ்வரர்கள் பட்டியலின்படி, 49 புள்ளி 9 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உலகின் 13ஆவது பெரிய பணக்காரராக முகேஷ் அம்பானி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

முகேஷ் அம்பானி மகன் திருமண விழா

பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் - ஷ்லோகா தம்பதியரின் திருமணம் மும்பையில் விமர்சையாக நடைபெற்றது.

77 views

எரிக்சன் நிறுவன நிலுவையை தராவிட்டால் 3 மாத சிறை - அனில் அம்பானிக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை

எரிக்சன் நிறுவனத்திற்குத் தர வேண்டிய 453 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை 4 வாரங்களுக்குள் கொடுக்க வேண்டும் என அனில் அம்பானிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

119 views

ஸ்டாலின் - முகேஷ் அம்பானி சந்திப்பு

திமுக தலைவர் ஸ்டாலினை ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி சந்தித்தார்.

2391 views

ஏழுமலையான் கோவிலில் முகேஷ் அம்பானி சாமி தரிசனம்...

பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி, தமது மகள் இஷா அம்பானியின் திருமண அழைப்பிதழை, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைத்து வழிபாடு நடத்தினார்.

211 views

பிற செய்திகள்

"பேரிடர் நிவாரண குழு ஏற்படுத்தி இழப்பீடு வழங்க வேண்டும்" - தமிழக அரசுக்கு சீமான் வலியுறுத்தல்

பேரிடர் நிவாரண குழு ஒன்றை அமைத்து மக்களுக்கான இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

7 views

பள்ளிக்கு பொதுமக்கள் கல்வி சீர்வரிசை

மதுரை மாவட்டம் புதுத் தாமரைபட்டி கிராமத்தில் இயங்கி வரும் சி.எஸ்.ஐ தொடக்க பள்ளிக்கு பொதுமக்கள் கல்வி சீர்வரிசை வழங்கினர்.

7 views

ஆவின் டேங்கர் லாரிகள் 21ஆம் தேதி முதல் ஸ்டிரைக்

ஆவின் டேங்கர் லாரிகள் 21ஆம் தேதி முதல் ஸ்டிரைக் என அறிவிப்பு

9 views

குற்றாலத்தில் ஆர்ப்பரித்து கொட்டும் அருவி - குவியும் சுற்றுலாப்பயணிகள்

குற்றாலத்தில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குளிப்பதற்காக, ஆர்வத்துடன் சுற்றுலாப்பயணிகள் குவிந்து வருகின்றனர்.

21 views

கேரளா - கர்நாடகா மழை வெள்ள பாதிப்பு: சூர்யா, கார்த்தி ரூ.10 லட்சம் நிதியுதவி

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மற்றும் கர்நாடகவிற்கு , நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி, 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கியுள்ளனர்.

6 views

3 கேரள மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்

கேரளாவில் கனமழை தொடர்ந்து வரும் நிலையில், கண்ணூர், காசர்கோடு, இடுக்கி மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.