மழை நீரில் மூழ்கிய நகரங்கள் - படகுகள் மூலம் மீட்பு பணிகள் துரிதம்

வெள்ளத்தில் மூழ்கிய மகாராஷ்டிரா மாநிலத்தில், பல்வேறு இடங்களில், படகுகள் மூலம் மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
x
மகாராஷ்டிரா மாநிலத்தில் தொடரும் மழையால் பல பகுதிகள் வெள்ளக்காடாய் காட்சியளிக்கின்றன. அங்குள்ள சங்கிலி நகரில் மக்கள் கொத்துக்கொத்தாக வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு இடம்மாற்றப்பட்டு வருகின்றனர். தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் சிறிய ரக படகுகள் மூலம் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்று வருகின்றனர். சங்கிலி மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கி தவித்த 300 பொதுமக்கள், காப்பாற்றப்பட்டுள்ளனர். இதே போல, கோலாப்பூர் மாவட்டத்தில் 475 பொதுமக்கள் மீட்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக தேசிய பேரிடர் மீட்பு படை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்