காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து : குடியரசு தலைவர் ஒப்புதல்
ஜம்மு- காஷ்மீர் மாநிலத்திற்கு அரசியலமைப்பு சட்டம் வழங்கியிருந்த 370 வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டு உள்ளது.
ஜம்மு- காஷ்மீர் மாநிலத்திற்கு அரசியலமைப்பு சட்டம் வழங்கியிருந்த 370 வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டு உள்ளது. புதுடெல்லியில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு செய்யப்பட்டது. இதற்கு, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உடனடியாக ஒப்புதல் அளித்தார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கான, 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கும் தீர்மானம் நிறைவேறியது. மாநிலங்களவைத்தலைவர் வெங்கய்யா நாயுடு தீர்மானத்தின் மீது, வாக்கெடுப்பு குறித்து அறிவித்ததும் உறுப்பினர்கள், தங்களது ஆதரவை தெரிவித்தனர். குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த தீர்மானம் நிறைவேறியது.
10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கும் தீர்மானம் : குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றம்

Next Story