சத்தீஸ்கர் : என்கவுன்ட்டரில் 7 நக்சல்வாதிகள் சுட்டுக் கொலை

சத்தீஸ்கர் மாநிலத்தின் சிட்டாகோட்டா வனப்பகுதியில், நிகழ்ந்த என்கவுன்ட்டரில் 7 நக்சல்வாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
சத்தீஸ்கர் : என்கவுன்ட்டரில் 7 நக்சல்வாதிகள் சுட்டுக் கொலை
x
சத்தீஸ்கர் மாநிலத்தின் சிட்டாகோட்டா வனப்பகுதியில், நிகழ்ந்த என்கவுன்ட்டரில் 7 நக்சல்வாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ராஜ்நந்த்காவுன் மாவட்டத்திற்குட்பட்ட வனப்பகுதி வழியாக ஊருக்குள் ஊடுருவ சில நக்சல்வாதிகள் முயன்றனர். அப்போது பாதுகாப்பு படையினர், துப்பாக்கி சூடு நடத்தியதில், 7 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்களும், துப்பாக்கி குண்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. 

"வெள்ளத்தில் கயிறு கட்டி பயிற்சி மேற்கொண்ட வீரர்கள்"

வட கிழக்கு மாநிலங்களில் பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில்,கன மழையால் சத்தீஸ்கர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன. இந்நிலையில், சுக்மா மாவட்டத்தில் பருவமழை காலத்தில் மாவோயிஸ்ட் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாக வெள்ளத்தில் கயிறு கட்டி,ராணுவ வீரர்கள் பயிற்சி மேற்கொண்டனர்.

Next Story

மேலும் செய்திகள்