கூடுதலாக 5 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்ய வாய்ப்பு : திருப்பதி ஏழுமலையான் கோயில் அலுவலர் தகவல்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முக்கிய பிரமுகர்களுக்கான தரிசனம் ரத்து செய்யப்பட்ட பிறகு கூடுதலாக 5 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.
கூடுதலாக 5 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்ய வாய்ப்பு : திருப்பதி ஏழுமலையான் கோயில் அலுவலர் தகவல்
x
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முக்கிய பிரமுகர்களுக்கான தரிசனம் ரத்து செய்யப்பட்ட பிறகு கூடுதலாக 5 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயில் இணை செயல் அலுவலர் தர்மா ரெட்டி செய்தியாளர்களை சந்தித்த போது இந்த தகவலை தெரிவித்தார். கடந்த 18ஆம் தேதி முதல் எல்1, எல்2, எல் 3 என்று மூன்று வகையான விஐபி தரிசன முறையை ரத்து செய்யப்பட்டதாக அவர் கூறினார். மூலவர் சன்னதியின் அருகே வழங்கப்பட்டு வந்த தீர்த்தம், சடாரி ஆசீர்வாதம்  ஆகியவை மூலவர் சந்நிதிக்கு வெளியே வழங்கப்படுவதால் தற்போழுது விஐபி தரிசனத்திற்கான நேரம் வெகுவாக குறைந்துள்ளதாக தர்மா ரெட்டி தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்