மருத்துவ கட்டுப்பாட்டு அறை திறக்க வேண்டும் : ஜம்மு காஷ்மீர் மாநில அரசு அதிரடி உத்தரவு

இந்திய பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள குப்வாரா மாவட்டத்தில், மருத்துவ கட்டுப்பாட்டு அறை அமைக்க ஜம்மு காஷ்மீர் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
மருத்துவ கட்டுப்பாட்டு அறை திறக்க வேண்டும் : ஜம்மு காஷ்மீர் மாநில அரசு அதிரடி உத்தரவு
x
இந்திய பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள குப்வாரா மாவட்டத்தில், மருத்துவ கட்டுப்பாட்டு அறை அமைக்க ஜம்மு காஷ்மீர் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அப் காலிக் என்னும் மருத்துவர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவில், மருத்துவ அதிகாரி, மருந்து விற்பன்னர், கிடங்கு அதிகாரி, மூத்த உதவியாளர், ஓட்டுனர் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். இந்த குழு, நோயாளிகளின் பராமரிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், போதுமான மருந்துகளை இருப்பு வைக்க வேண்டும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் அசாதாரண சூழல் நிலவி வரும் நிலையில் மருத்துவமனை கட்டுப்பாட்டு அறை திறக்கபட்டுள்ளது குழப்பத்தை அதிகரித்துள்ளது. 
 


Next Story

மேலும் செய்திகள்