"காஷ்மீரில் அமைதியை சீர்குலைக்க பாகிஸ்தான் முயற்சி" - சினார் படைப்பிரிவு கமாண்டர் தில்லான் எச்சரிக்கை

ஜம்மு காஷ்மீரில் அசாதாரண சூழல் நிலவி வருவதால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. ஜம்முவில் நடப்பது என்ன என்பது குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.
காஷ்மீரில் அமைதியை சீர்குலைக்க பாகிஸ்தான் முயற்சி - சினார் படைப்பிரிவு கமாண்டர் தில்லான் எச்சரிக்கை
x
ஜம்மு காஷ்மீரில் தற்போது ராணுவ குவிப்பு காரணமாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது. அங்கு அமர்நாத் யாத்திரைக்கு தற்போது மத்திய அரசு தடை செய்துள்ளது. அதே போல் ஏற்கனவே யாத்திரை சென்று இருக்கும் பக்தர்களையும் வெளியேற அறிவுறுத்தி உள்ளது. இதனால் யாத்திரை சென்ற பக்தர்கள், திரும்பி வந்த வண்ணம் உள்ளனர்.

இதனிடையே, ஸ்ரீநகரில் செய்தியாளர்களிடம் பேசிய, சினார் படைப்பிரிவு கமாண்டர் தில்லான், காஷ்மீரில் அமைதி நிலவி வருவதாகவும்,அதனை கெடுத்திட பாகிஸ்தான் முயலுவதாகவும் புகார் கூறினார். 

இதனிடையே, அதிகப்படியான ராணுவவீரர்கள் குவிப்பு, அமர்நாத் யாத்ரீகர்களை திரும்ப செல்ல வேண்டும் என்ற அறிவிப்பு உள்ளிட்டவை மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக காங்கிரஸ் மூத்தத்தலைவர் குலாம்நபி ஆசாத் கருத்து தெரிவித்துள்ளார். 

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில், காங்கிரஸ் மூத்த தலைவர்கள், ஜம்மு காஷ்மீர் கொள்கை அமைப்பு குழுவை சந்தித்ததாகவும் அவர் கூறினார். மேலும், ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு, குழப்பங்களை விளைவிக்கும் அவசர முடிவு எதையும் எடுக்க வேண்டாம் என காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதனிடையே, காஷ்மீரில் பள்ளிகளுக்கு விடுமுறை எதுவும் அறிவிக்கப்படவில்லை என்றும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், மண்டல ஆணையர் பஷீர் அகமது கான் விளக்கம் அளித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு உரிமைகளை வழங்கக் கூடிய அரசியல் சாசனத்தின் 370 மற்றும் 35ஏ பிரிவுகளை நீக்குவதில் மத்திய பாஜக அரசு உறுதியாக உள்ளது. காஷ்மீரில் ராணுவ வீரர்கள் திடீரென குவிக்கப்பட்டுள்ளதே இப்பிரிவை நீக்குவதற்கான நடவடிக்கைதான் எனவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதனால் ஜம்மு காஷ்மீரில் அசாதாரண சூழல் நிலவுகிறது.

Next Story

மேலும் செய்திகள்