4வது படிநிலைக்கு உயர்த்தப்பட்ட சந்திரயான் 2 : நிலவின் சுற்றுவட்ட பாதைக்கு வரும் 6ஆம் தேதி நகர்கிறது

சந்திரயான் 2 விண்கலம் இன்று வெற்றிக்கரமாக 4வது படிநிலைக்கு உயர்த்தப்பட்டது.
4வது படிநிலைக்கு உயர்த்தப்பட்ட சந்திரயான் 2 : நிலவின் சுற்றுவட்ட பாதைக்கு வரும் 6ஆம் தேதி நகர்கிறது
x
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் 2, கடந்த 22ஆம் தேதி ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 ராக்கெட் மூலம் ஏவப்பட்டது.  வெற்றிக்கரமாக பூமியின் சுற்றுவட்டப் பாதையில் சந்திரயான் 2  நிறுவப்பட்டது. இதனையடுத்து, நிலவின் தென் துருவத்திற்கு செல்வதற்கு ஏதுவாக, சந்திரயான் 2 விண்கலம், படி படியாக, பூமியின் சுற்றுவட்டப்பாதையிலிருந்து உயர்த்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று சந்திரயான் 2 விண்கலத்தில் உள்ள மோட்டாரை விஞ்ஞானிகள் சரியாக 10 நிமிடம் 76 விநாடிகள் இயக்கி, விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதையை 4வது படிநிலைக்கு உயர்த்தினர். இதனையடுத்து, பூமியின் சுற்று வட்டப் பாதையிலிருந்து விலகி,  நிலவுக்கான சுற்றுவட்டப் பாதையை நோக்கி செல்லக் கூடிய அடுத்த நகர்வு வரும் 6ஆம் தேதி மேற்கொள்ளப்பட உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. தற்போது சந்திரயான் 2 விண்கலம் பூமிக்கு அருகே குறைந்தபட்சம் 277 கி.மீ. தொலைவிலும், அதிகபட்சமாக 89 ஆயிரத்து ,472 கி.மீ. தொலைவிலும் நீள்வட்ட பாதையில் சுற்றி வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்