"அமர்நாத் யாத்ரீகர்கள் உடனடியாக திரும்ப வேண்டும்" - ஜம்மு காஷ்மீர் மாநில அரசு அறிவுறுத்தல்

காஷ்மீரில் அமர்நாத் யாத்திரையில் பங்கேற்றுள்ள யாத்ரீகர்கள், உடனடியாக திரும்ப வேண்டும் என ஜம்மு காஷ்மீர் அரசு உத்தரவிட்டுள்ளது.
x
காஷ்மீரில் அமர்நாத் யாத்திரையில் பங்கேற்றுள்ள யாத்ரீகர்கள், உடனடியாக திரும்ப வேண்டும் என ஜம்மு காஷ்மீர் அரசு உத்தரவிட்டுள்ளது. 

இது குறித்து அம்மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தீவிரவாத தாக்குதல்கள் நடத்தப்பட உள்ளதாக உளவுத்துறை மூலம் ரகசிய  தகவல் கிடைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு ஜம்மு காஷ்மீரின் பல்வேறு இடங்களில், பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அமர்நாத் கோவிலுக்கு யாத்திரை சென்றுள்ள பக்தர்கள் பாதுகாப்பு கருதி உடனடியாக திரும்ப வேண்டும் என்றும், ஜம்மு காஷ்மீர் அரசு அறிவுறுத்தியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்