தனிநபர்களே தீவிரவாத இயக்கங்களை தொடங்குகின்றனர் : ப.சிதம்பரத்துக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா பதில்

சட்ட விரோத தடுப்பு மசோதா மீதான விவாதத்துக்கு பதிலளித்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தனிநபர்களை தீவிரவாதி என்ற பெயரில் சேர்ப்பது குறித்து ப.சிதம்பரம் கேள்விக்கு பதிலளித்தார்.
தனிநபர்களே தீவிரவாத இயக்கங்களை தொடங்குகின்றனர் : ப.சிதம்பரத்துக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா பதில்
x
சட்ட விரோத தடுப்பு மசோதா மீதான விவாதத்துக்கு பதிலளித்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தனிநபர்களை தீவிரவாதி என்ற பெயரில் சேர்ப்பது குறித்து ப.சிதம்பரம் கேள்விக்கு பதிலளித்தார். ஒரு தீவிரவாத இயக்கத்தை மத்திய அரசு தடை செய்தால், அதே தனி நபர்கள் ஒன்று சேர்ந்து புதிய பெயரில் மற்றொரு தீவிரவாத இயக்கத்தை ஆரம்பிப்பதாகவும், அதுபோன்றவர்களை எப்படி தடுப்பது எனவும் அமித் ஷா கேள்வி எழுப்பினார். சட்டங்களை தவறாக பயன்படுத்துவதாக குற்றஞ்சாட்டும் காங்கிரஸ் கட்சி, தனது கடந்த காலத்தை திரும்பி பார்க்க வேண்டும் எனவும் நெருக்கடி நிலையின்போது, 19 மாத காலத்துக்கு ஊடகங்களை தடை செய்ததோடு, அரசியல் தலைவர்களையும் சிறையில் தள்ளிய அரசு காங்கிரஸ் அரசு எனவும் அமித் ஷா விமர்சித்தார்.

Next Story

மேலும் செய்திகள்