மலபாரில் உற்சாகமாக நடந்த படகு போட்டி : பெண்கள் பிரிவில் மத்தியப் பிரதேசத்தின் ஷிகா சவுகான் முதலிடம்

கேரளாவில் மலபார் ஆற்றுத் திருவிழாவை ஒட்டி நடைபெற்ற படகு போட்டியில் இந்த ஆண்டு முதன் முதலாக இந்திய பெண் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார்.
மலபாரில் உற்சாகமாக நடந்த படகு போட்டி : பெண்கள் பிரிவில் மத்தியப் பிரதேசத்தின் ஷிகா சவுகான் முதலிடம்
x
கேரளாவில் மலபார் ஆற்றுத் திருவிழாவை ஒட்டி நடைபெற்ற படகு போட்டியில் இந்த ஆண்டு முதன் முதலாக இந்திய பெண் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார். சர்வதேச அளவில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில், கேரள சுற்றுலா துறை 2012 ஆம் ஆண்டு முதல் மலபார் ஆற்றுத் திருவிழா என்ற பெயரில் மலையில் இருந்து பாயும் நீரோட்டத்தில் படகு ஓட்டுபவர்களுக்கான போட்டியை நடத்தி வருகிறது. இந்த ஆண்டு 5 பகுதிகளில் உள்ள நீரோட்டங்களில் நடைபெற்ற போட்டியில் 9 நாடுகளில் இருந்து 120 பேர் பங்கேற்றனர். இறுதிப் போட்டியில் ரஷ்ய நாட்டின் இவான் காஸ்வேசோவ் முதல் பரிசை பெற்றார். பெண்களுக்கான போட்டியில் இந்தியாவை சேர்ந்த ஷிகா சவுகான் முதல் பரிசை தட்டிச் சென்றார். 16 வயதான ஷிகா மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்  என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்