ஜம்மு காஷ்மீர் : என்.ஐ.ஏ அதிகாரிகள் 4 இடங்களில் சோதனை
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். பாராமுல்லா மாவட்டத்தில், ஒரே நாளில் 4 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. காஷ்மீரில், தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதிதிட்டம் தீட்டி வருவதாக தகவல் வெளியாகி உள்ள, என்.ஐ.ஏ அதிகாரிகள் அங்கு தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தீவிரவாத அச்சுறுத்தல் தொடர்பாக, நாடு முழுவதும் பல்வேறு இடங்களில், என்.ஐ.ஏ அதிகாரிகள் அடிக்கடி இதுபோன்ற சோதனை நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story