புதுச்சேரி : வேகத்தடையில் எல்.இ.டி. போக்குவரத்து சிக்னல்

புதுச்சேரியில் எல்.இ.டி. மின் விளக்குகளுடன் ஔிரும் வேகத்தடை சிக்னலை சோதனை முறையில் போக்குவரத்து போலீசார் அமைத்துள்ளனர்.
புதுச்சேரி : வேகத்தடையில் எல்.இ.டி. போக்குவரத்து சிக்னல்
x
புதுச்சேரியில் எல்.இ.டி. மின் விளக்குகளுடன் ஔிரும் வேகத்தடை சிக்னலை சோதனை முறையில் போக்குவரத்து போலீசார் அமைத்துள்ளனர். புதுச்சேரி காமராஜர் சாலை நான்கு முனை சந்திப்பில் சிறிய அளவிலான வேகத்தடையில் எல்.இ.டி. சிக்னல்கள் அமைக்கப்பட்டு, அதில் போக்குவரத்து சிக்னலுடன் இணைக்கப்பட்டு உள்ளது. இந்த வேகத்தடையில் பொருத்தப்பட்டுள்ள எல்.இ.டி.விளக்குகள் போக்குவரத்து சிக்னல்களுடன் ஒளிரும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளதால் வாகன ஓட்டிகள் சிக்னல்களை கடந்து செல்லும் போது சாலை விதிகளை பின்பற்ற ஏதுவாக இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையும் மீறி வாகன ஓட்டிகள் சென்றால், ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் போக்குவரத்து போலீசார் எச்சரித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்