எடியூரப்பா அரசு மீது திங்கள்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பு

கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா அம்மாநில சட்டசபையில் வரும் திங்கள்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார்.
எடியூரப்பா அரசு மீது திங்கள்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பு
x
கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான அரசு, கடந்த 23ஆம் தேதி பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் கவிழ்ந்ததால், 105 எம்.எல்.ஏக்களை கொண்ட பாஜக ஆட்சி அமைத்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை முதலமைச்சராக பதவியேற்ற எடியூரப்பா, வரும் 31ஆம் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு ஆளுநர் வஜூபாய் வாலா  உத்தரவிட்டார். இந்நிலையில், இரண்டு நாள் முன்னதாகவே, வரும் திங்கள்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க எடியூரப்பா திட்டமிட்டுள்ளார். அன்றே நிதி மசோதாவையும் சட்டப்பேரவையில் தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் தினமான திங்கள்கிழமை பெங்களூரு விதான் சவுதா பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்