காங்கிரஸ் புதிய தலைவர் தேர்வு - 6 தலைவர்கள் பெயர் பரிசீலனை

காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, வெளிநாடு சென்றிருந்த ராகுல்காந்தி தாயகம் திரும்பி விட்டார்.
காங்கிரஸ் புதிய தலைவர் தேர்வு - 6 தலைவர்கள் பெயர் பரிசீலனை
x
காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, வெளிநாடு சென்றிருந்த ராகுல்காந்தி, தாயகம் திரும்பி விட்டார். ஏற்கனவே, மூத்த தலைவர்களின் சமரச முயற்சி தோல்வி அடைந்து விட்டதால், புதிய தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் காங்கிரஸ் மேலிடத்திற்கு உருவாகி உள்ளது. புதிய தலைவர் யார்? என்ற இந்த பட்டியலில்,மொத்தம் 6 பேர் பெயர்கள் பரிசீலனையில் உள்ளதாக தெரிய வந்துள்ளது.எனவே, விரைவில், காங்கிரஸ் செயற்குழு கூடி, புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. சோனியாகாந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகிய இருவரின் ஆதரவு பெற்ற ஒருவரே, காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார் என டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

Next Story

மேலும் செய்திகள்