ரூ.25 கொடுத்தால் ஒட்டகப்பாலை ருசி பார்க்கலாம்...

ஒட்டக பால் குடிக்க இனி துபாய் செல்ல தேவையில்லை, இனி 25 ரூபாய் கொடுத்தால் ஒட்டகப்பாலை ருசிப்பார்த்துவிடலாம்...
ரூ.25 கொடுத்தால் ஒட்டகப்பாலை ருசி பார்க்கலாம்...
x
பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களின் விற்பனையில் பவள விழா கொண்டாட இருக்கும் தனியார் நிறுவனம் தான் இதனை நம் ஊருக்கும் கொண்டுவர இருக்கிறது. கடந்த ஜனவரி மாதம், முதல் முறையாக குஜராத் மாநிலத்தில் 500 மில்லி லிட்டர் பாட்டில் ஒட்டக பால் 50 ரூபாய்க்கு அறிமுகம் செய்த அந்த நிறுவனம், இம்முறை 200 மில்லி லிட்டர் பாட்டில் ஒட்டக பாலை 25 ரூபாய்க்கு இந்தியா முழுவதும் கொண்டு சேர்க்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. ஏறக்குறைய பசும் பாலில் உள்ள அதே அளவிலான சத்து ஒட்டகப்பாலிலும் கிடைக்கபெறும் நிலையில், இன்சுலின் மாதிரியான புரதச் சத்துகள் அதிகம் இருப்பதால், சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது, இது ஜீரண கோளாறால் அவதிப்படுவோருக்கு இது ஒரு வரபிரசாதம். நோய் தடுப்பு எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் இதன் பங்கு அதிகம் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்