அதிருப்தி எம்.எல்.ஏக்கள் கோரிக்கை அதிகரிப்பை தடுக்க வியூகம் - கர்நாடகாவில் பொதுத்தேர்தலை சந்திக்க பாஜக யோசனை என தகவல்

கர்நாடகாவில் பாஜக ஆட்சி மலரும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில், திடீர் தாமதம் உருவாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிருப்தி எம்.எல்.ஏக்கள் கோரிக்கை அதிகரிப்பை தடுக்க வியூகம் - கர்நாடகாவில் பொதுத்தேர்தலை சந்திக்க பாஜக யோசனை என தகவல்
x
இதனிடையே, கர்நாடகாவில், பாஜக ஆட்சி மலரும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில், திடீர் தாமதம் உருவாகி இருப்பது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிருப்தி காங்கிரஸ் எம்.எல்.ஏக்களின் கோரிக்கைகள் அதிகரிப்பை தடுக்க, பாஜக அதிரடி வியூகம் வகுத்துள்ளது. அதேநேரம், அதிருப்தி எம்.எல்.ஏக்கள், பதவியில் தொடர்ந்தால், மீண்டும் காங்கிரஸிடம் செல்லவும் வாய்ப்பு உள்ளது. மற்றொருபக்கம், பொதுத்தேர்தலை சந்திக்கும் யோசனையும் பாஜகவிடம் உள்ளதாக பெங்களூரு தகவல்கள் தெரிவிக்கின்றன.

கர்நாடக பாஜக தலைவர்கள் குழு, டெல்லி பயணம் :

கர்நாடக அரசியலில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றங்களை தொடர்ந்து, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க, அம்மாநில பா.ஜ.க. தலைவர்கள் குழு, நேற்று டெல்லி சென்றுள்ளது. இந்த குழுவில், பா.ஜ.க. மூத்த தலைவர்கள் ஜெகதீஷ் ஷெட்டர், பசவராஜ் பொம்மை, அரவிந்த் லிம்பாவளி, மாதேசாமி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த தலைவர்கள் குழு, இன்று பா.ஜ.க. தலைவர் அமித்ஷா, செயல் தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோரை சந்தித்து, முக்கிய ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளனர். கர்நாடக சட்டப் பேரவையில், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு ஆர்வம் காட்டிய பா.ஜ.க., இப்போது, ஆட்சி அமைக்கும் முயற்சியில் தாமதம் காட்டி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கர்நாடக அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ராஜினாமா :



இதனிடையே, கர்நாடகா அரசின் சார்பில், 2015ம் ஆண்டு முதல் உச்சநீதிமன்றத்தில் ஆஜராகி வரும் கூடுதல் அட்வகேட் ஜெனரல் தேவதத் காமத், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஆளுநருக்கு, அவர் அனுப்பி உள்ள ராஜினாமா கடிதத்தில், சொந்த காரணங்களுக்காக அந்த பதவியில் இருந்து விலகுவதாக குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்