தபால்துறை தேர்வு ரத்து : பிரதமர் மோடி மற்றும் ரவிசங்கர் பிரசாத் அவர்களுக்கு தமிழக மக்கள் சார்பில் நன்றி - திருச்சி சிவா

மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தின் அறிவிப்புக்கு திருச்சி சிவா நன்றி தெரிவித்து கொண்டார்.
தபால்துறை தேர்வு ரத்து : பிரதமர் மோடி மற்றும் ரவிசங்கர் பிரசாத் அவர்களுக்கு தமிழக மக்கள் சார்பில் நன்றி - திருச்சி சிவா
x
 மைத்ரேயன், அதிமுக எம்.பி :

காலையில் நாங்கள் இந்த பிரச்சனையை எழுப்பினோம். உடனடியாக இதற்கு மத்திய அமைச்சர் தீர்வு கூறியுள்ளார்.எனது கட்சி மற்றும் அதிமுக அரசு சார்பில் நாங்கள் நன்றி தெரிவித்து கொள்கிறோம்.

திருச்சி சிவா, திமுக எம்.பி. :

மத்திய அமைச்சரின் இந்த அறிவிப்புக்கு நாங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம் பிரதமர் மோடி மற்றும் ரவிசங்கர் பிரசாத் அவர்களுக்கு தமிழக மக்கள் சார்பில் நன்றி.

டி.ராஜா., இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி. :

இந்த முடிவு வரவேற்கத்தக்கது. பிராந்திய மொழிகள் மட்டுமல்ல. அனைத்து இந்திய மொழிகளுக்கும், மதிப்பு அளிக்க வேண்டும்அதற்குரிய மரியாதை கொடுக்கப்பட வேண்டும்.

ஆனந்த் சர்மா, காங்கிரஸ் எம்.பி. :

தபால்துறை தேர்வு குறித்த சர்ச்சை தொடர்ந்த வண்ணம் இருந்தன 
தற்போது இதற்கு ஒரு நல்ல தீர்வு கிடைத்துள்ளது.மத்திய அமைச்சரின் அறிவிப்புக்கு நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன். மிக்க மகிழ்ச்சி.Next Story

மேலும் செய்திகள்