மூணாறில் பூத்துக்குலுங்கும் க்ரைஸ்கோமிய பூக்கள் : அரிய வகை பூக்களை காண குவியும் சுற்றுலா பயணிகள்

கேரள மாநிலம் மூணாறில் பூத்துக்குலுங்கும் க்ரைஸ்கோமிய பூக்கள், சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.
மூணாறில் பூத்துக்குலுங்கும் க்ரைஸ்கோமிய பூக்கள் : அரிய வகை பூக்களை காண குவியும் சுற்றுலா பயணிகள்
x
கேரளாவில் உள்ள மூணாறு சுற்றுலாத் தலம், தென்னகத்து காஷ்மீர் என்றும், பூக்களின் தேசம் என்றும் அழைக்கப்பட்டு வருகிறது. இங்கு வெயில் காலங்களில் மட்டும் பூக்கும் அபூர்வ வகையிலான க்ரைஸ்கோமிய  பூக்கள், தற்பொழுது பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பூக்க தொடங்கியுள்ளன. அங்குள்ள மவுண்ட் கார்மல் தேவாலயத்தின் அருகில் சரிவான பகுதிகளில் இந்த அபூர்வ க்ரைஸ்கோமிய பூக்கள் காணப்படுகிறது. ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிறத்தில் காணப்படும் இந்த பூக்கள், தீ படருவது போல் காட்சி அளிப்பதால், இவற்றுக்கு தீ நாளங்களின் தலைவன், நட்சத்திர தீ போன்ற பெயர்களும் வழங்கப்படுகின்றன. தென் ஆப்பிரிக்கா, சுவீடன் உள்ளிட்ட வெளிநாடுகளில் அதிகமாக காணப்படும், இந்தப்பூக்கள் 30 முதல் 150 சென்டிமீட்டர் உயரம் வரை வளரும் திறன் கொண்டவையாகும். மேலும் இவை அதிக நறுமணம் தரக்கூடிய பூக்களாகவும் விளங்கி வருகின்றன. இந்நிலையில் மூணாறு மலைச்சரிவுகளில் பூத்துக்குலுங்கும் இந்த அரிய வகை பூக்களை காண சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்