பொழுதுபோக்கு பூங்காவில் உடைந்து விழுந்த ராட்டினம்

குஜராத் மாநிலம், அகமதாபாத்தில், ராட்சத ராட்டினம் உடைந்து விழுந்ததில் இரண்டு பேர் உயிரிழந்தனர், 26 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
பொழுதுபோக்கு பூங்காவில் உடைந்து விழுந்த ராட்டினம்
x
குஜராத் மாநிலம், அகமதாபாத்தில், ராட்சத ராட்டினம் உடைந்து விழுந்ததில் இரண்டு பேர் உயிரிழந்தனர், 26 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். கன்காரியா பகுதியில் செயல்பட்டு வரும் , பொழுது போக்கு பூங்காவில் பெண்டுலம் வடிவ, ராட்சத ராட்டினம் இயக்கப்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், நேற்று மாலை ராட்டினத்தில் மக்கள் சுற்றிக் கொண்டிருக்கையில் திடீரென்று உடைந்து விழுந்தது. இதில், 28 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி இருவர் உயிரிழந்த நிலையில், மேலும் 14 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. .

Next Story

மேலும் செய்திகள்