ரூ.200, 500, 2,000 அச்சடிக்கும் ஆகும் செலவு குறைந்துள்ளது - மாநிலங்களவையில் அரசு தகவல்

பணமதிப்பு நீக்க நடவடிக்கையை தொடர்ந்து, இரண்டாயிரம் ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
ரூ.200, 500, 2,000 அச்சடிக்கும் ஆகும் செலவு குறைந்துள்ளது - மாநிலங்களவையில் அரசு தகவல்
x
பணமதிப்பு நீக்க நடவடிக்கையை தொடர்ந்து, இரண்டாயிரம் ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. ரிசர்வ் வங்கிக்கு சொந்தமான நிறுவனம் மட்டுமே அதை அச்சிட்டு வருகிறது. அந்த நிறுவனம் அச்சிட்டு கொடுக்க ஒரு நோட்டுக்கு வாங்கும் தொகை விவரத்தை நேற்று மாநிலங்களவையில், நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் தாக்கல் செய்தார். 2018-2019 நிதியாண்டில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டு ஒன்றுக்கு அச்சடிக்க கொடுக்கப்பட்ட விலை 3 ரூபாய் 53 காசுகள் என்றும், முந்தைய நிதியாண்டில் இது 4 ரூபாய் 18 காசுகளாக இருந்தது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. முன்பை விட 65  காசுகள் செலவு குறைந்து உள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.இதுபோல், 500 ரூபாய் நோட்டு அச்சடிக்க ஆகும் செலவு 2 ரூபாய் 39 காசுகளில் இருந்து 2 ரூபாயில் 13 காசுகளாகவும்,   200 ரூபாய் நோட்டுக்கான செலவு 2 ரூபாய் 24 காசுகளில் இருந்து 2 ரூபாய் 15 காசுகளாகவும் குறைந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்