ஆந்திரா : லஞ்சம் வாங்கிய தலைமை காவலர்... கையும் களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்புத்துறை

ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டத்தில் லஞ்சம் வாங்கிய தலைமைக் காவலர் ஒருவரை லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கைது செய்தனர்.
ஆந்திரா : லஞ்சம் வாங்கிய தலைமை காவலர்... கையும் களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்புத்துறை
x
ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டத்தில் லஞ்சம் வாங்கிய தலைமைக் காவலர் ஒருவரை லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கைது செய்தனர். அங்குள்ள ஏ.கொண்டூர் கிராமத்தைச் சேர்ந்த உமா மகேஸ்வர் என்பவர் அளித்த புகாரை பதிவு செய்யாமல் ஒரு வாரமாக காலம் தாழ்த்திய அந்த தலைமைக் காவலர், 5 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் புகாரை பதிவு செய்வதாக கூறியுள்ளார். அதனையடுத்து உமா மகேஸ்வர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தகவல் அளித்ததுடன், அவர்கள் வழிகாட்டுதல்படி ரசாயனம் தடவப்பட்ட ரூபாய் நோட்டுகளை தலைமைக் காவலரிடம் அளித்துள்ளார். அப்போது மறைந்திருந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தலைமை காவலரை கையும் களவுமாக கைது செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்