உத்தரப்பிரதேசம் : தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட பெண் - உயிருடன் கண்டுபிடிப்பு

உத்தரப்பிரதேசம் காசியாபாத்தில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட கோமல் தலன் என்ற பெண், தற்போது பெங்களூருவில் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
உத்தரப்பிரதேசம் : தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட பெண் - உயிருடன் கண்டுபிடிப்பு
x
உத்தரப்பிரதேசம் காசியாபாத்தில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட கோமல் தலன் என்ற பெண், தற்போது பெங்களூருவில் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். கடந்த ஜூலை 5ஆம் தேதி காணாமல் போன இவரின் கார், ஜூலை 6ஆம் தேதி காசியாபாத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. கணவரும், கணவர் வீட்டாரும் துன்புறுத்தியதால் தற்கொலை செய்யப்போவதாக அவர் எழுதிய கடிதம் காரில் இருந்து கிடைத்த நிலையில், 3 நாட்கள் தேடியும் அவர் கிடைக்காததால், மீட்பு பணி நிறுத்தப்பட்டது. இருப்பினும் வழக்கு குறித்து போலீசார் விசாரித்து வந்த நிலையில், கோமல் பெங்களூருவில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து பெங்களூருவில் இருந்து கோமலை அழைத்து வர காசியாபாத் போலீசார் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.  

Next Story

மேலும் செய்திகள்