புதுச்சேரி மாநில திட்டக்குழு கூட்டம் : "வரும் 13ஆம் தேதி மீண்டும் நடைபெறும்" - கிரண்பேடி

புதுச்சேரி பட்ஜெட் தொடர்பான திட்டக்குழு கூட்டம் மீண்டும் வருகிற 13ஆம் தேதி நடைபெறும் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநில திட்டக்குழு கூட்டம் : வரும் 13ஆம் தேதி மீண்டும் நடைபெறும் - கிரண்பேடி
x
புதுச்சேரியில் 2019 - 20 ஆம் நிதி ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கை இம்மாத இறுதியில் தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பான திட்டக்குழு கூட்டம் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தலைமையில் கடந்த 6ஆம் தேதி நடைபெற்றது. கூட்டத்துக்கு சட்ட பேரவையில் உள்ள அனைத்து கட்சிகளின் சட்டமன்ற தலைவர்களுக்கு அழைப்பு விடுக்காததை கண்டித்து முதல்வர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் வெளிநடப்பு செய்ததால் கூட்டம் ரத்தானது.
 
இந்நிலையில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி வாட்ஸ்அப்பில் திட்டக்குழு கூட்டம் தொடர்பாக தகவல் வெளியிட்டுள்ளார். அதில், திட்டக்குழு கூட்டம் மீண்டும் வரும் 13ஆம் தேதி நடைபெறும் என்றும் கூட்டத்தில் அனைத்து கட்சிகளின் சட்டமன்ற தலைவர்கள் பங்கேற்கும் வகையில் அரசாணையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்