பாஜகவிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த காங்கிரஸ் திட்டம்
பெங்களூரூவில் உள்ள பாஜக அலுவலகத்தில் பாரதிய ஜனதா சட்டமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
பெங்களூரூவில் உள்ள பாஜக அலுவலகத்தில், பாரதிய ஜனதா சட்டமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. எடியூரப்பா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பாஜகவின் கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, காந்தி சிலை எதிரே, ஆர்ப்பாட்டம் நடத்த காங்கிரஸ் கட்சியினர் முடிவு செய்துள்ளனர். இதற்காக, டெல்லியிலிருந்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், கபில்சிபில் ஆகிய இருவரும் பெங்களூரு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Next Story

